\
Space Arms Race: Is India Ready? One Button Could Cripple the Global Economy
Model ImageGoogle Gemeni

விண்வெளியில் ஆயுதப் போட்டி.. இந்தியா தயாரா? ஒரு பொத்தானில் முடங்கும் உலகப் பொருளாதாரம்!

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை விண்வெளியைப் போர்க்களமாக மாற்றி, புதிய சர்வதேச ஆயுதப் போட்டிக்கு (Space Arms Race) வழிவகுக்கும் எனச் சீனாவும் ரஷ்யாவும் கடும் கவலை தெரிவித்துள்ளன.
Published on

எதிர்​காலப் போர்​கள் விண்​வெளியை மைய​மாக கொண்டே நடைபெறும் என வல்லுநர்கள் கருதும் நிலையில், அமெரிக்கா தனது ஆயுதங்களை விண்வெளியில் நிலைநிறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு கவலை தெரிவித்துள்ள ரஷ்யாவும், சீனாவும் அதைச் சாத்தியப்படுத்தும் நிலையிலும் உள்ளது. இதில், இந்தியாவின் நிலைப்பாடு எத்தகையது? இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? அலசுகிறது இந்தக் கட்டுரை!

‘இனி, எதிர்​காலப் போர்​கள் விண்​வெளியை மைய​மாக கொண்டே நடைபெறும்’என வல்லுநர்கள் எச்சரித்திருக்கும் நிலையில், உலக நாடுகளிடம் இச்செய்தி மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. நவீனகாலப் போரியல் மற்றும் சர்வதேசக் கட்டமைப்புகள் அனைத்தும் முழுமையாக விண்வெளித் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதே இதற்கு முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும்,

1. அதிநவீன ஏவுகணைகளை வழிநடத்துதல்,

2. தரைப்படை மற்றும் கடற்படைக்கான ஜி.பி.எஸ் (GPS) வழிகாட்டல், 3. ரேடார் கண்காணிப்பு

4. எதிரிப் படைகளின் நகர்வுகளைத் துல்லியமாகக் கணிப்பது

என அனைத்தும் விண்வெளிச் செயற்கைக்கோள்களையே நம்பியுள்ளன. மேலும், ஒரு நாட்டின் விண்வெளி உள்கட்டமைப்பு தாக்கப்பட்டால்,

us
usreuters

1. வங்கிப் பரிவர்த்தனைகள்

2. பங்குச் சந்தை

3. கடல்சார் கப்பல் போக்குவரத்து

4. இணையச் சேவை

5. வானிலை எச்சரிக்கை அமைப்புகள்

ஆகியன ஒரே நேரத்தில் முடக்கப்படுவதுடன், அப்போரில் ஈடுபடும் நாடே பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படும். இதையடுத்தே, எதிரி​களின் அச்சுறுத்தல்​களை முறியடிக்க, அமெரிக்கா விண்​வெளி​யில் ஆயுதங்​கள் நிலைநிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்திற்கு அப்பால் இராணுவ ஆயுதங்கள் நீண்டகாலமாக நிலைநிறுத்தப்பட்டு வந்தாலும், ஓர் ஆயுதம் விண்வெளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். அதேநேரத்தில், நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுதங்களின் துல்லியமான எண்ணிக்கை, அவை இயங்கும் சுற்றுப்பாதை அல்லது அவற்றின் குறிப்பிட்ட தொழில்நுட்ப விவரங்களை, அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிப்படுத்தவில்லை.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை விண்வெளியைப் போர்க்களமாக மாற்றி, புதிய சர்வதேச ஆயுதப் போட்டிக்கு (Space Arms Race) வழிவகுக்கும் எனச் சீனாவும் ரஷ்யாவும் கடும் கவலை தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், இத்தகைய ஓர் அமைப்பை உருவாக்கத் தேவைப்படும் வளங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவின் அளவைக் கருத்தில் கொண்டால், அது ஒரு சில நாடுகளிடம் மட்டுமே முறையாக உள்ளன. அந்த நாடுகள்,

US - China
US - Chinareuters

1. ரஷ்யா

2. சீனா

3. இந்தியா

இந்த தொழில்நுட்பத்தை,

1. அமெரிக்கா 1985லேயே நடத்திக் காட்டியது. அப்போது, அது அறிவியல் செயற்கைக்கோளை அழித்தது.2. சீனா 2007-ஆம் ஆண்டு ஃபெங்யுன்-1C வானிலை செயற்கைக்கோளை அழித்தது.

3. ரஷ்யா 2021-இல் கோஸ்மோஸ்-1408 செயற்கைக்கோளை அழித்தது.

4. இந்தியாவோ, 2019-ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று நிகழ்த்திக் காட்டியது.

இந்தியா, குறைந்த புவி வட்டப்பாதையில் (LEO) இயங்கிய செயற்கைக்கோளை, 'பிருத்வி டிஃபென்ஸ் வெஹிக்கிள் மார்க்-2' ஏவுகணை மூலம் தாக்கி அழித்து, திறனை நிரூபித்தது. இதன்மூலம் சுற்றுப்பாதையில் உள்ள ஒரு செயற்கைக்கோளை வெற்றிகரமாக அழித்த அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்த நாடாக இந்தியா உருவெடுத்தது. எனினும், விண்வெளியைப் போர்க்களமாக மாற்றுவதையும், அங்கு ஆயுதங்களைப் பரப்புவதையும் இந்தியா ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறது. இதன் காரணமாகவே, வேறு எந்தச் சோதனைகளையும் இந்தியா மேற்கொள்ளவில்லை.

Model Image
Model ImageChag Gpt

ஆயினும், ஒரு செயற்கைக்கோளை வீழ்த்துவதற்குத் தேவையான தொழில்நுட்பமும் ஏவுகணைகளும் இந்தியாவிடம் உள்ளன என்பதற்கு மிஷன் சக்தி் ஓர் உறுதியான சான்றாக விளங்குகிறது. தவிர, எதிரி நாட்டுச் செயற்கைக்கோள் தொடர்புகளை முடக்கும் 'ஜேமிங்' (Jamming) மற்றும் சிக்னல் தடுத்து நிறுத்தும் தொழில்நுட்பங்களையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது. இவையனைத்தும் தனது சொந்த விண்வெளி அமைப்புகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வளர்த்தெடுத்து வருகிறது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com