கொரோனாவை அழிக்க வாஷிங்மெஷினில் துவைக்கப்பட்ட பணம்: நஷ்டத்தில் முடிந்த தென்கொரிய ஐடியா

கொரோனாவை அழிக்க வாஷிங்மெஷினில் துவைக்கப்பட்ட பணம்: நஷ்டத்தில் முடிந்த தென்கொரிய ஐடியா
கொரோனாவை அழிக்க வாஷிங்மெஷினில் துவைக்கப்பட்ட பணம்:  நஷ்டத்தில் முடிந்த தென்கொரிய ஐடியா

 தென்கொரியாவில் கொரோனா தொற்று பரவிவிடும் என்ற அச்சத்தில் ரூபாய் நோட்டுகளை வாஷிங்மெஷினில் போட்டு துவைக்கப்போக அந்த முயற்சி மிகப்பெரிய நஷ்டத்தில் முடிந்தது. தன் குடும்பத்தில் நடக்கவிருந்த இறுதிச்சடங்கு ஒன்றிற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்துபெற்ற 50 ஆயிரம் தென்கொரிய (இந்திய மதிப்பில் 3137)  ரூபாய் நோட்டுகள் வீணாகிவிட்டன.  

கொரோனா காரணமாக தென்கொரிய மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நாட்களைக் கழித்துவருகின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் தொற்று வந்துவிடக்கூடாது என்ற கவலையில் பொருட்களின் மேற்பகுதியை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து வருவதை பழக்கமாக வைத்துள்ளனர்.  

பெரும்பாலானவர்கள் பொருட்களை நீரில் கழுவிவிடுகின்றனர். சிலருக்கு அது பாதுகாப்பாகவும், அதுவே சிலருக்கு கடைசிப் பாதையாகவும் அமைந்துவிடுகிறது. அப்படித்தான் சியோலில் வாழும் ஒருவருக்கு நடந்துவிட்டது.   

பாதிக்கப்பட்டவர் யாரென்ற அடையாளத்தைக் கூறாமல் அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தன்னிடம் இருந்த பணத்தை அவர் வாஷிங்மெஷினில் போட்டிருக்கிறார். துவைத்தால் பணத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் வைரஸ் போகிவிடும் என்று நம்பியுள்ளார். நடந்தது என்னவோ பரிதாபமான முடிவு.

இறுதிச்சடங்கிற்காக வாங்கிவைத்திருந்த அத்தனை பணத்தையும் அவர் இழந்துவிட்டார். மீண்டும் அந்தப் பணத்தை பயன்படுத்தமுடியாத அளவுக்கு  வாஷிங்மெஷின் சுக்குநூறாக கிழித்துவிட்டது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்,  உடனே கொரிய வங்கிக்கிளைக்குச் சென்று புலம்பியிருக்கிறார். ஆனால் அவர்கள் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகு, அதன் பாதி மதிப்புக்கு பணத்தைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com