உலகம்
லட்சக்கணக்கான பணத்தை வீதியில் வீசிய பெண் - எடுக்காத மக்கள்
லட்சக்கணக்கான பணத்தை வீதியில் வீசிய பெண் - எடுக்காத மக்கள்
தென்கொரியாவில் காரில் சென்ற பெண் ஒருவர் லட்சக்கணக்கான பணத்தை சாலையில் வீசி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
தென்கொரியாவின் டேகு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னிடம் உள்ள பணத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதனால் நகரத்தின் 11 இடங்களுக்கு காரில் சென்று, பணத்தை வீசியுள்ளார். இதை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சாலையில் லட்சக்கணக்கான பணத்தை கண்ட மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். ஆனால் அந்தப் பெண் எதிர்பார்த்தது போல யாரும் பணத்தை எடுத்துச் செல்லவில்லை. அதற்கு மாறாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் அந்தப் பணத்தை கைப்பற்றியுள்ளனர்.