ஒரு குழந்தை பெற்றால் ரூ.62 லட்சம்; 3 குழந்தைகள் பெற்றால் ரூ.1.86 கோடி தரும் நிறுவனம்! எங்க தெரியுமா?

தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க கட்டுமான நிறுவனம் ஒன்று, ‘ஒரு குழந்தை பெற்றால் 62.28 லட்சம் பரிசு’ என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது, கேட்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தென் கொரியா
தென் கொரியாமுகநூல்

ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியாவில் கடந்த சில வருடங்களாகவே பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அந்நாட்டின் பிறப்பு விகிதத்தினை அதிகரிக்கும்படியாக தென் கொரியாவின் BOOYOUNG என்ற கட்டுமான குழுமம் ஒன்று, ‘நம் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 1 குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.62.3 லட்சம் வழங்கப்படும்’ ($75,000) என்ற அறிவிப்பு வெளியிட்டு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் லீ இதுகுறித்து தெரிவிக்கையில், “குழந்தைகளை வளர்க்க நிறைய செலவாகும் என்பதால்தான் பலரும் குழந்தைப் பெற்றுக்கொள்வதில்லை. ஆகவே நாங்கள் அளிக்கும் நிதி உதவி அவர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் எங்கள் நிறுவனம் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் கருவியாகவும் நாட்டின் எதிர்காலத்தை சூழ்ந்துள்ள கவலைகளை சரி செய்யயும் வகையிலும் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

இத்தோடு 2021 முதல் குழந்தை பெற்றுக்கொண்ட தங்கள் ஊழியர்களுக்கு 43.5 கோடி ரூபாயை பிரித்து தர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். இதன்கீழ் சுமார் 70 குழந்தைகள் பயன்பெறுவர் என தெரிகிறது. இதேபோல 3 குழந்தைகள் பெற்றால், 1.86 கோடி ($2,25,000) தருவதாகவும் அந்நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

தென்கொரியாவின் பிறப்பு விகிதத்தினை பொறுத்தவரை, 2025 ம் ஆண்டிற்குள் பிறப்பு விகிதம் 0.65 என்ற மோசமான அளவிற்கு செல்லக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய நிலையின்படி, 0.78 என்ற விகிதத்தில் தென் கொரியாவின் பிறப்பு விகிதம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியா
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய முயற்சி: ஜோடிகளை நிறுத்தி தேர்ந்தெடுக்க களம் அமைத்த தென்கொரியா!

மேலும் அந்நாட்டின் தேசிய புள்ளியியல் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், ”2022 ல் சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்துள்ளன. இது முந்தையை ஆண்டைவிட 0.4 சதவிகிதம் குறைவு” என்று தெரிவித்துள்ளது. திருமண விகிதங்கள் குறைவதும் பிறப்பு விகிதம் குறைவதற்கு காரணமாக அமைவதாக பார்க்கப்படுகிறது.

தென் கொரியா
மீண்டும் அதிர்ச்சி! கணவன்,மனைவி, 2 குழந்தைகள் சடலமாக மீட்பு! அமெரிக்காவில் தொடரும் இந்தியர்கள் மரணம்

1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட BOOYOUNG நிறுவனத்தின் இந்த முடிவு தென் கொரியாவின் மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கப்படும் பிறப்பு விகிதத்திற்கு நிச்சயம் ஒரு தீர்வினை ஏற்படுத்தும் கருவியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com