தென்கொரியாவில் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தென்கொரியாவின் ஜிகியோன் நகரில் பிரபலமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. 8 மாடிகள் கொண்ட இந்தக் இந்த கட்டிடம் முக்கோண வடிவைக் கொண்டது. இதன் மூன்றாவது மாடியில் இருக்கும் விளையாட்டு மையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த வணிக வளாகத்தில் வீடுகள், நீச்சல் குளம், ஓட்டல்கள் ஆகியவையும் உள்ளன. தீ விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்தவர்கள் வெளியே தப்பி ஓட முயன்றனர். ஆனால், அதற்கு வழி இல்லாததால் 29 பேர் பலியானார்கள்.
உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்து வருகின்றன. இதில் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலர் இந்த விபத்தில் சிக்கி இருக்கலாம் என தெரிகிறது. என்ன காரணத்துக்காக தீ விபத்து ஏற்பட்டது என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.