வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமா? - விளக்கம் அளித்த தென்கொரியா!

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமா? - விளக்கம் அளித்த தென்கொரியா!

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமா? - விளக்கம் அளித்த தென்கொரியா!
Published on

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலை தென் கொரியா மறுத்துள்ளது

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. புகைப்பிடித்தல், உடல் பருமன், அதிக வேலைப்பளு காரணமாக இதய நோயால் கிம் ஜாங் உன் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைப்பிறகு அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

வட கொரிய விவகாரங்களை கவனிக்கும் அதிகாரிகளின் தகவலை குறிப்பிட்டு சிஎன்என் இந்த செய்தியை வெளியிடுவதாக குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலை தென் கொரியா மறுத்துள்ளது. அது போல எந்த விஷயமும் வடகொரியாவில் தென்படவில்லை என தென்கொரியா கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com