உலகம்
வடகொரியாவுக்கு பதிலடியாக தென்கொரியா ஏவுகணை சோதனை
வடகொரியாவுக்கு பதிலடியாக தென்கொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்திய இடம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வகையில் தென்கொரியா ஏவுகணை சோதனை நடத்தியது.
வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.
தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் படைத்த ஏவுகணைகள் முதல், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வரை சோதித்து பார்க்கப்பட்டதாக தென்கொரியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்திய இடம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வகையில், இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அத்துடன் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போர் விமானங்களை பறக்கவிட்டு போர் ஒத்திகையிலும் தென்கொரியா ஈடுபட்டது.