தென்கொரியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று பரவல்

தென்கொரியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று பரவல்
தென்கொரியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று பரவல்

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்தநிலையில், தென்கொரியாவில் மீண்டும் கொரோனா பரவல் அசுர வேகமெடுத்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் மகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், ஆல்பா, காமா, பீட்டா, டெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமிக்ரான் என உருமாற்றம் அடைந்து, கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்துவந்த நிலையில் தற்போது சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

தென் கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 6 லட்சத்து 21 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் 62 பேர் வெளிநாட்டினர். ஒட்டுமொத்த பாதிப்பு 8.25 லட்சமாக அதிகரித்துள்ளது என கொரியா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தென் கொரியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு 55% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப்பின் இதுபோன்று கொரோனா தொற்று அதிகரிப்பது இதுதான் முதல்முறை, அதிலும் லட்சக்கணக்கில் அதிகரிப்பது இதுதான் முதல்முறையாகும்.

மேலும் ஒரே நாளில் 429 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் உள்ள 86 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளதே உயிரிழப்பு குறைவுக்கு காரணம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கும் எந்த திட்டமும் தற்போது இல்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com