மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் தென்கொரியா

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் தென்கொரியா
மீண்டும் இயல்பு நிலைக்குத்  திரும்பும் தென்கொரியா

தென்கொரியாவில் கொரோனா தொற்று குறைந்திருப்பதை அடுத்து அங்கு மீண்டும் இயல்பு வாழ்க்கை பெரிதாகத் திரும்பி இருக்கிறது. பணியாளர்கள் தங்களது அலுவலக பணிகளுக்குத் திரும்பி இருக்கின்றனர். அருங்காட்சியகங்கள், நூலகங்கள் என பொது அறிவை வளர்க்கும் மையங்களும் மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கின்றன.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், பிற நாடுகளைப் போல தென்கொரியாவையும் ஆரம்பத்தில் முடக்கிப் போட்டது. தனி நபர் இடைவெளி, சுகாதாரம், பொது முடக்கம் என அடுத்தடுத்து எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெருமளவு உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்தின. குறிப்பாகத் தொற்று உள்ளவர்களைக் கண்டறிவது, பரிசோதிப்பது, சிகிச்சை அளிப்பது என எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தென் கொரியாவுக்கு கை மேல் பலன் கொடுத்தது.

இதனால், தற்போது நோய்த் தொற்று வெகுவாக குறைந்து, அந்நாடு முழுவதும் பெருமளவு இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. பொது முடக்கத்திற்குப் பின் சுதந்திர காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியிருக்கும் தென்கொரிய மக்கள், நீண்ட நாட்களுக்குப் பின் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தைப் பார்த்து ரசித்தனர். முதல் முறையாக வந்த பார்வையாளருக்குப் பூங்கொத்து கொடுத்து அருங்காட்சியக ஊழியர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

கால்பந்து போன்ற சில முக்கியமான விளையாட்டுகளும், அடுத்த வாரம் தொடங்கவிருக்கிறது. மே 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதே நேரம் மீண்டும் நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க ஒவ்வொருவரும் தினசரி வாழ்வில் முகக்கவசங்கள் அணிவது, கைகளை அவ்வப்போது சோப்பு நீரால் தூய்மை செய்வது ஆகியவற்றை அவசியம் மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் சுங் சே அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com