ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை காதலர் தின பரிசாக கொடுத்த பெண்: வலுக்கும் கண்டனம்!

ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை காதலர் தின பரிசாக கொடுத்த பெண்: வலுக்கும் கண்டனம்!

ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை காதலர் தின பரிசாக கொடுத்த பெண்: வலுக்கும் கண்டனம்!
Published on

காதலர் தினத்தன்று ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி அதன் இதயத்தை பரிசாக கணவருக்கு அளித்த காதலிக்கு கடுமையான கண்டனங்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி காதலர்கள் பரிசுகளை பரிமாறிக்கொள்வது வழக்கம்தான். அன்பை பரிசாக பரிமாறி கொள்ளும் உன்னத நாளில் ஒரு உயிரைக் கொன்று பரிசு வழங்கினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் அரங்கேறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேட்டையாடும் பெண் ஒருவர் 17 வயது ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி அதன் இதயத்தை வெட்டி எடுத்து தன் கணவருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 32 வயதான மெரலைஸ் வான் டெர் மெர்வ் சிறுவயது முதலே வேட்டையாடி வருகிறார் . இவர் சிங்கம், புலி, யானை என 500க்கும் மேற்பட்ட விலங்குகளை வேட்டையாடி உள்ளார்.

இந்நிலையில் தற்போது ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி கடுமையான கண்டனங்களை சம்பாதித்துள்ளார். வேட்டையாடப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் புகைப்படங்களை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு பெரிய ஒட்டகச்சிவிங்கியின் இதயம் எப்படி இருக்கும் என யோசித்தது உண்டா? இந்த நாளுக்காக நான் நாட்களை எண்ணிக்கொண்டு இருந்தேன் என தெரிவித்துள்ளார்.

மெரலைஸ் வானுக்கு கடுமையான கண்டனங்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் கண்டனங்களுக்கு பதிலளித்துள்ள அவர் தன்னுடைய செயலை நியாயப்படுத்தியுள்ளார். வயதான ஆண் ஒட்டகச்சிவிங்கியை கொல்லப்படுவது தென்னாப்பிரிக்காவில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களை காப்பாற்ற உதவும் ஒன்றுதான். இதனால் உள்ளூர்வாசிகளுக்கு இறைச்சி தாராளமாக கிடைக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் மெரலைஸ் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத விலங்குகள் ஆர்வலர்கள், வேட்டையாடுவது வெறும் கொலைதான். அதனால் நிச்சயம் பயனில்லை. குறிப்பாக விலங்குகளின் ஆண் விலங்குகளை வேட்டையாடுவது அதன் குழுவையே சேதப்படுத்தும். பாதிப்பை உண்டாக்கும். இது ஏற்கத்தக்கதல்ல எனத் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com