சோமாலிலாந்து கொடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
சோமாலிலாந்து கொடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுpt web

சோமாலிலாந்துக்கு அங்கீகாரம் | பின்னணியில் அமெரிக்கா, இஸ்ரேல் வியூகம்?., எதிர்க்கும் அரபு நாடுகள்.!

சோமாலியாவின் ஒரு பகுதி மக்கள் தங்களை சோமாலிலாந்து என அறிவித்துக்கொண்டுள்ள நிலையில், அப்பகுதியை இஸ்ரேல் 34 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கீகரித்துள்ளது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Published on

சோமாலியாவின் தென்பகுதியில் உள்ள பகுதி தங்களை சோமாலிலாந்து என 1991ஆம் ஆண்டு அறிவித்துக்கொண்டு தனி நாடாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 60 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், 34 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நாட்டை, இஸ்ரேல் முதல் நாடாக அங்கீகரித்துள்ளது உலக அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.

சோமாலிலாந்து அதிபர் அப்திரஹ்மான் முகமது அப்துல்லாஹி
சோமாலிலாந்து அதிபர் அப்திரஹ்மான் முகமது அப்துல்லாஹிpt web

இதன் பின்னணியில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பெரிய வியூகம் இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. காஸாவில் இருந்து வெளியேற்றப்படும் பாலஸ்தீன மக்களை சோமாலிலாந்தில் குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் பின் காஸாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சோமாலிலாந்தை வளர்த்தெடுக்கும் போக்கு புதிய புவிசார் அரசியல் போருக்கும் வழி ஏற்படுத்தும் என்றும் அச்சங்கள் உள்ளன.

இந்த நிலையில், சோமாலிலாந்து என தனிப்பகுதி இல்லை என்றும் அது தங்கள் நாட்டின் ஓர் அங்கம் என்றும் சோமாலியா கூறியுள்ளது. மேலும், ஆப்பிரிக்க யூனியனும் அரபு நாடுகளும் இஸ்ரேலின் முடிவை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளன.

சோமாலிலாந்து கொடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
2025 Recap | தமிழ்நாட்டு அரசியலில் விவாதத்தை உண்டாக்கிய நிகழ்வுகள்.. ஓர் பார்வை.!

சோமாலிலாந்தை தனிநாடாக அங்கீகரித்திருக்கும் முடிவு குறித்து அரபு லீக் பொதுச் செயலாளர் அகமது அபூல் கெய்ட் கூறுகையில், "இஸ்ரேலின் இந்த முடிவு சர்வதேச சட்டத்தின் தெளிவான மீறல் மட்டுமின்றி நாடுகளின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை கொள்கையின் அப்பட்டமான மீறல்”என தெரிவித்துள்ளார்.

சோமாலிலாந்து கொடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
2026 தேர்தல் கூட்டணி | திமுகவா அல்லது தவெகவா., மீண்டும் விவாதத்தை தொடங்கிய காங்கிரஸ்.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com