நதியில் விழுந்த விமானம்

நதியில் விழுந்த விமானம்

நதியில் விழுந்த விமானம்
Published on

அமெரிக்காவில் நதியில் விழுந்த விமானத்திலிருந்த பயணிகளை மீட்புக்குழுவினர் நீண்ட போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர். 

மேற்கு ஹாரிசான் பகுதியில் இருந்து ஹாம்ப்டன்ஸ் நகருக்கு டெய்ல்விண்ட் ஏர் சர்வீஸ்- க்கு சொந்தமான செஸ்னா கேரவன் C208 ரக சிறிய விமானம் சென்றுக்கொண்டிருந்தது. விமானம் கிழக்கு நியூயார்க் பகுதியில் உள்ள நதிக்கு அருகே சென்ற போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு திடீரென விமானம் நதியில் தரையிறக்கப்பட்டது. இந்த திடீர் விபத்தால் விமானத்தில் பயணம் செய்த ஒன்பது பயணிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பாக தகவலறிந்த மீட்புக்குழுவினர், பயணிகளையும், விமானப் பணியாளர்களையும் நீண்ட போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர் விமானம் ஆற்றில் இறங்கியதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நதியில் இறங்கிய விமானத்தை, துறைமுகத்திலிருந்த இழுவை படகு மூலமாக தரைப்பகுதிக்கு இழுத்து வரப்பட்டது.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com