சவூதிக்கு மரண அடி : நூற்றுக்கணக்கில் பாய்ந்து வந்த ட்ரோன்கள்.. உலகமே பாதிக்கப்படும் அபாயம்!
இஸ்ரேல், அமெரிக்கப் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி இறுதியில் ஏற்பட்ட போர் தற்போது வரை தொடர்ந்து வருகிரியாது. போரின் முதல் நாளிலேயே தங்களது உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் இழப்பால் கடும் ஆத்திரம் அடைந்த ஈரானின் ராணுவம், அமெரிக்க நிலைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதன் காரணமாக அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், பக்ரைன், ஈராக் ஆகிய நாடுகளை ஈரான் ராணுவம் தாக்கிவருகின்றது. அதோடு இந்த நாடுகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்பின் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடந்து வருகிறது.
இந்த தாக்குதலுக்கு அந்நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த போரில் ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி குழு மற்றும் ஈராக்கில் இருந்து செயல்படும் ஆயுதம் ஏந்திய அமைப்புகளும் பங்கேற்று வருகிறது.
இந்த நிலையில், உலக அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றான சவூதி அரேபியாவின் அப்கேக் ஆலையை குறிவைத்து நேற்று ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ட்ரோன்களில் பலவற்றை தற்காப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாகவும், சில ட்ரோன்கள் மட்டுமே அப்கேக் ஆலையை தாக்கியதாகவும் சவூதி அரேபியா கூறியுள்ளது. மேலும் இராக்கில் உள்ள ஈரானுக்கு ஆதரவான குழுக்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான அப்கேக் ஆலை உலகின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் 5-ல் இருந்து 7 சதவீதம் வரை பங்களிக்கிறது. தற்போது இந்த தாக்குதல் காரணமாக அங்கிருந்து ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு நாள் ஒன்றுக்கு சவூதிக்கு பல ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

