\
RAF Fairford airbase
RAF Fairford airbasereuters

அடுத்தடுத்து ஒலித்த சைரன்கள்.. அமெரிக்க ராணுவத் தளங்களில் பரபரப்பு!

அமெரிக்க ராணுவத் தளங்களில் ட்ரோன் அச்சுறுத்தல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
Published on: 
Summary

மத்திய கிழக்கில் ஈரானுடன் நீடித்த போரின் பின்னணியில், இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க ராணுவ விமானப்படைத் தளங்களில் ட்ரோன் அச்சுறுத்தல் ஏற்பட்டது. பாதுகாப்பு சைரன்கள் ஒலித்ததால் பொதுமக்கள் வீடுகளுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மூன்று தளங்களில் ட்ரோன்கள் ஊடுருவியதா என்பது உறுதி செய்யப்படவில்லை.

செய்தியாளர் - M.மீரா

மத்திய கிழக்கில் அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கியதைத் தொடர்ந்து, 8 மாதங்களை கடந்தும் போர் நீடித்து வருகிறது. இந்த மோதல் தற்போது சர்வதேச எண்ணெய் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியைக் (Strait of Hormuz) கட்டுப்படுத்தும் நோக்கிலும் விரிவடைந்துள்ளது.

இந்த போரின் போது ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த இங்கிலாந்தில் உள்ள RAF Fairford விமானத் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வந்தது. மேலும், இங்கிலாந்தில் இருக்கும் மற்றுமொரு தளமான RAF Mildenhall விமானப்படை தளத்தை அமெரிக்கா முக்கியமாக தனது 'வான்வழி எரிபொருள் நிரப்பும்' (Aerial Refueling) மற்றும் 'வான்வழி உளவு' (Reconnaissance) நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வந்தது.

RAF
RAFreuters

இந்த தளங்களில் உள்ள போர் விமானங்கள் மீது நாசவேலை அல்லது தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததால் அஅனைத்து போர் விமானங்களும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க ராணுவ விமானப்படைத் தளங்களில் அடுத்தடுத்து ட்ரோன் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, பல்வேறு ராணுவத் தளங்களில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள RAF லேக்கன்ஹீத் (RAF Lakenheath) விமானப்படைத் தளத்தில், அனுமதியின்றி ட்ரோன் ஒன்று பறந்ததாக அமெரிக்க விமானப்படை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில், RAF ஃபெல்வெல் (Feltwell) மற்றும் RAF மில்டன்ஹால் ( raf mildenhall) ஆகிய பகுதிகளிலும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

RAF Mildenhall
RAF Mildenhall reuters

மாலை சுமார் 5.30 மணியளவில் சைரன்கள் ஒலித்ததாகவும், ஒலிபெருக்கி மூலம் மக்கள் வீடுகளுக்குள் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்த மூன்று ராணுவத் தளங்களிலும் தனித்தனியாக ட்ரோன்கள் ஊடுருவியதா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ, விமானங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகளுக்கு சேதமோ ஏற்படவில்லை. இவ்வாறு தொடர்ந்து அதிகரிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால், ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

RAF Fairford airbase
அமெரிக்காவில் 11000 விமானங்கள் முடக்கம்.. ஈரானின் சைபர் தாக்குதலா? நாடே அதிர்ச்சி!