தமிழில் சப் டைட்டில் போட்டு வீடியோ வெளியிட்ட சிங்கப்பூர் பிரதமர்

தமிழில் சப் டைட்டில் போட்டு வீடியோ வெளியிட்ட சிங்கப்பூர் பிரதமர்
தமிழில் சப் டைட்டில் போட்டு வீடியோ வெளியிட்ட சிங்கப்பூர் பிரதமர்
 பேஸ்புக் காணொளி காட்சி மூலம் சிங்கப்பூர் பிரதமர்  லீ சியன் லூங்  மக்களிடையே உரையாற்றினார். 
 
உலகம் முழுவதும் கொரோனா நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளும் இந்தத் தாக்குதலால் அதிக இழப்பைச் சந்தித்துள்ளன. அதே போல சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளும் அதிக பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.
 
 
இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர்  லீ சியன் லூங் பேஸ்புக் காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், “இன்று  நான் வெளியிட்ட காணொளியில், சிங்கப்பூரில் கொரோனா நிலவரம் பற்றிப் பேசினேன். அப்போது நான், வெளிநாட்டு வாழ் ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் ஏற்பட்ட கிருமித் தொற்று சம்பவங்கள் பற்றியும், எவ்விதத் தொடர்பும் இல்லாமல் பரவி வரும் கிருமித்தொற்று சம்பவங்கள் பற்றியும் பேசினேன். நம் மூத்தவர்கள் தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்று அவர்களிடம் பேச விரும்பினேன்” என்றார்.
 
 
இந்தக் காணொளியில், தமிழில் சப் டைட்டில் போடப்பட்டுள்ளது. மேலும் அவர் சிங்கப்பூர் மொழியில் பேசியுள்ளார். அதில், “தயவுசெய்து, உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள், ஃபேஸ்புக்-இல் (Facebook) இல்லையெனில், அவர்களிடம் இதனைக் காண்பிக்கவும். நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்க, அனைவரும் ஒரே சிந்தனையைக் கொண்டிருக்கவேண்டும்” என்று  கூறிய அவர், மேலும் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
 
 
அதனைத் தொடர்ந்து  அவர், "வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து பணியாற்றும் ஊழியர்கள் இந்த சிங்கப்பூரை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் நலனில் நாங்கள் அக்கறை கொள்கிறோம். ஒருவேளை நான் பேசுவதை வெளிநாட்டு வாழ் ஊழியர்களின் குடும்பத்தினர் பார்த்தால், அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் கணவரோ, உங்கள் மகனோ, உங்கள் அப்பாவோ இங்கு இருந்தால், அவர்களை நாங்கள் பத்திரமாகவே திரும்ப அனுப்புவோம். மேலும் இந்த நிலைமை மாற இந்த கடினமான காலங்களைக் கடந்து செல்ல வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com