சிங்கப்பூர் பிரதமர் ட்விட்டரில் பகிர்ந்த ‘முன்னேறு... வாலிபா..’ தமிழ்பாடல்

சிங்கப்பூர் பிரதமர் ட்விட்டரில் பகிர்ந்த ‘முன்னேறு... வாலிபா..’ தமிழ்பாடல்
சிங்கப்பூர் பிரதமர் ட்விட்டரில் பகிர்ந்த ‘முன்னேறு... வாலிபா..’ தமிழ்பாடல்

சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகள் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. இங்கு முன்னேறு வாலிபா என தொடங்கும் தமிழ் பாடல் தேசிய கீதமாக உள்ளது. "முன்னேறு வாலிபா, முன்னேறி என்றும் தொடுவான் நோக்குவாய்' என்ற இந்த பாடலை கடந்த 1967ம் ஆண்டு முதல் சிங்கபூரில் உள்ள பள்ளிகளிலும், அந்த நாட்டின் தேசிய அணிவகுப்பின் போதும் பாடப்பட்டு வருகிறது. அதேபோல், சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ தமிழர் ஒருவரால் ‘சிங்கே நாடு’ என்ற பாடல் உருவாக்கப்பட்டது. இந்தப் பாடலும் மிகவும் பிரபலம்.

இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மெட்லி பாடல் ஒன்றினை பகிர்ந்துள்ளார். அழகான இசை கோர்வையுடன், 6 இளைஞர்கள் இந்த பாடலை உருவாக்கியுள்ளார்கள். இதில் முன்னேறு வாலிபா மற்றும் சிங்கை நாடு என இரண்டுப் பாடலையும் கப்பேலா இசைக் குழுவினர் உருவாக்கியுள்ளனர். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் "இசை எவ்வாறு மொழி, இனம், மதங்களை தாண்டி ரசிக்ககவும், ஒன்றிணைய வைக்கிறது" என்று புகழ்ந்துள்ளார்.

‘முன்னேறு... வாலிபா... வாலிபா...
முன்னேறு வாலிபா முன்னேறு என்றும்
தொடுவாய் நோக்குவாய்
கண்தெரியாத கார் இருளில்
ஒளிரும் விண்மீனே

முன்னேறு... வாலிபா... முன்னேறு... வாலிபா...
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... வாலிபா...’ என்ற பாடலுடன் சிங்கே நாடு பாடலை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com