“சிங்கப்பூர் தலைவர்களை போலவே மோடி செயல்படுகிறார்” - பிரதமர் லீ சின் லூங்

“சிங்கப்பூர் தலைவர்களை போலவே மோடி செயல்படுகிறார்” - பிரதமர் லீ சின் லூங்
“சிங்கப்பூர் தலைவர்களை போலவே மோடி செயல்படுகிறார்” - பிரதமர் லீ சின் லூங்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் ‘தூய்மை இந்தியா’. இது காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 அன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இத்திட்டம் சம்பந்தமான உரையில் பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லூங் பற்றி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மோடியின் உரையை குறிப்பிட்டு சிங்கப்பூர் பிரதமர் தனது கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் அவர், இந்திய பிரதமரின் 'தூய்மை இந்தியா' திட்டத்தைப் போல 'சிங்கப்பூரை சுத்தமாக வைத்திருப்போம்' என்ற திட்டத்தால் சிங்கப்பூர் இன்று சுத்தமான நாடாக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் லீ சின் லூங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள பிரதமர் லீ சின் லூங்,  ஒரு திட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு சிங்கப்பூர் எப்படி சுத்தமான நாடாக வளர்ந்துள்ளது என்பதை தெரிவித்துள்ளார். 

அவர் கூறியுள்ள சில கருத்துக்களை காண்போம்:

1. சிங்கப்பூர் ஒரு காலத்தில் குப்பைக்கூளமாக இருந்தது. குப்பைகள் ஆறுகளில் கொட்டப்பட்டன. இதனை எங்கள் நாட்டின் முந்தைய தலைவர்கள் மாற்ற நினைத்து 'சிங்கப்பூரை சுத்தமாக வைத்திருப்போம்' திட்டத்தை தொடங்கினர். அதன்படி சுத்தத்தை ஒவ்வொரு வீட்டில் இருந்தும் தொடங்கினோம். எங்கள் ஆறுகளை சுத்தமாக்கினோம். தேவையற்ற கட்டுமானங்களை அப்புறப்படுத்தி அந்த இடங்களை பசுமையாக்கினோம். இன்று எங்கள் நாட்டின் ஆறு சுத்தமாக உள்ளது. ஆற்று நீரையே நாட்டின் நீர் தேவைக்காகவும் நாங்கள் பயன்படுத்துகிறோம்.

2. கழிவுநீர் மட்டும் வடிகால் பராமரிப்பில் சிங்கப்பூர் கவனம் எடுத்து கொண்டது. அதன்படி மழை நீரை சேமிப்பதும், அதனை தகுந்த முறையில் பயன்படுத்துவதையுமே முக்கிய திட்டமாக எடுத்துக்கொண்டோம். அதன்படி மழைநீர் முறையாக சேமிக்கப்பட்டு சுத்தப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. பயன்படுத்தப்பட்ட தண்ணீரை மறுசுழற்சி மூலம் பயன்படுத்திக்கொண்டோம்.

3. சிங்கப்பூர்  பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி சுத்தம் குறித்த தேவையை மக்களிடையே கொண்டு சேர்த்தது. உலக தண்ணீர் வாரம், அனைவருக்கும் சுகாதாரம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை சிங்கப்பூர் ஒருங்கிணைத்தது.

4. இந்தியாவை சிங்கப்பூருடன் இணைத்து பார்க்க முடியாது. இந்தியாவில் கங்கை நதி சிங்கப்பூரின் நதியைக்காட்டிலும் பல மடங்கு பெரியது. ஆனால் இந்திய பிரதமர் மோடி, சிங்கப்பூரின் முந்தைய தலைவர்களை போலவே செயல்படுகிறார். கையில் துடப்பத்தை எடுத்துக்கொண்டு அவரே களம் இறங்குகிறார். 'தூய்மை இந்தியா' திட்டம் என்பது சுத்தத்திற்காக நிகழ்ச்சி மட்டுமல்ல அது நம் வாழ்வாதாரத்தின் அடுத்த நிலை.

5. எங்களது அனுபவங்களை பகிர்ந்த கொண்டதில் சிங்கப்பூர் பெருமை கொள்கிறது. வளர்ச்சி திட்டங்களுக்காக இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளது. சுத்தமான நாட்டை உருவாக்கி எதிர்கால மக்களுக்கு சுகாதாரத்தை வழங்க இருக்கும் 'தூய்மை இந்தியா' திட்டத்துக்காக இந்திய பிரதமருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் சிங்கப்பூர் அரசு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com