அம்மா, அப்பா முதல் நீ, நான் வரை... ’தமிழ் - கொரிய’ மொழிகளுக்குள் இத்தனை ஒற்றுமைகளா !

அம்மா, அப்பா முதல் நீ, நான் வரை... ’தமிழ் - கொரிய’ மொழிகளுக்குள் இத்தனை ஒற்றுமைகளா !
அம்மா, அப்பா முதல் நீ, நான் வரை... ’தமிழ் - கொரிய’ மொழிகளுக்குள் இத்தனை ஒற்றுமைகளா !

தமிழ்நாட்டிலிருந்து தென் கொரியாவுக்கு செல்பவர்கள் அங்கிருந்து அம்மா... அப்பா... என்று ஆசையாகக் கூப்பிடும்போது, அங்குள்ளவர்கள் உங்களைத் திரும்பிப் பார்க்க வாய்ப்புகள் அதிகம். ஏன் தெரியுமா? நமது ஊரில் அம்மா, அப்பா போன்றுதான் கொரியாவிலும். இதுமட்டுமல்ல... இன்னும் பல வார்த்தைகள் நமது மொழியுடன் ஒத்துப்போகிறது. ஆசிய நாடுகளில் கலாச்சாரம் மற்றும் மொழிகள் ஒத்துப்போவது நமக்கு நன்கு தெரிந்த விஷயம்தான். அதேபோலத்தான் ஐரோப்பிய நாடுகளிலும். இது ஆராய்ச்சியாளர்கள், மானுடவியலாளர்கள், மொழியியலாளர்களின் ஆர்வத்தைத் தூண்டக்கூடியது.

நெட்ஃப்ளிக்ஸில் வெளியான கனடா நாடகமான, கிம்’ஸ் கன்வீனியன்ஸ், கொரியாவிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் ஒரு தம்பதியினரின் மகனைப் பற்றியது. இந்த நாடகத்தின்மூலம் தமிழ்- கொரிய மொழிகளுக்கு இடையேயான தொடர்புகள் மிகவும் பிரபலமாகியது.

சென்னை இன்கோ சென்டரைச் சேர்ந்த நந்தினி மேனன், தமிழ் மற்றும் கொரிய மொழிகளில் 3000க்கும் அதிகமான பொதுவான வார்த்தைகள் இருப்பதாகக் கூறியுள்ளார். உதாரணமாக தமிழில் ’முடி’, இதை கொரிய மொழியில் ’மாலி’(mao-li) என்று உச்சரிப்பர். வயிற்றை பேசும் தமிழில் ’தொப்பை’ என்று சொல்வதுண்டு. அதை கொரியாவில் ’தொப்பு’(toh-pu) என்று சொல்கின்றனர். ’இங்கே வா’ என்பதை ’இங்வா’(yeogiwa) என்று சொல்கின்றனர்.

கொரிய சொசைட்டி ஆஃப் தமிழ் ஆய்வுகள் தலைவர் ஜுங் நாம் கிம், ஒரு வீடியோ நேர்க்காணலில் பொதுவான சில வார்த்தைகளை மேற்கோளிட்டுக் காட்டியுள்ளார். நான், நீ, நாள், புல், ஏறு போன்ற வார்த்தைகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்கோ சென்டரைச் சேர்ந்த கொரிய ஆசிரியரான சூன்ஜின் பார்க், ‘’மொழியில் மட்டுமல்ல; கலாச்சாரத்திலும் தமிழ் மற்றும் தென்கொரிய நாடுகள் ஒத்துப்போகின்றன. எங்கள் ஊரிலும் வாசல்களில் கோலம் போடுவது வழக்கம். அதுபோலத்தான் இங்கும். நிறைய நிகழ்ச்சிகளில் கவனித்தபோது, நடனம் மற்றும் பாடல் போன்றவையும் ஒத்துப்போகின்றன. அதனால்தான் கே-பாப் என்ற இசை தற்போது பிரபலமாகி வருகிறது.

இதுதவிர உணவும் சிலநேரங்களில் ஒத்துத்தான் போகிறது. அங்கும் முக்கிய உணவு அரிசிதான். தமிழ்நாட்டைப் போலத்தான் நிறையப்பேர் அதிக காரமான உணவுகளைத்தான் விரும்புவார்கள்’’ என்று கூறியுள்ளார்.

                                                                                                                                                         (table courtesy - the news minute)

நந்தினி கூறுகையில், ‘’கொரியாவில் கொழுக்கட்டையைப் போன்றே மண்டு என்ற உணவை எடுத்துக்கொள்வார்கள். அதிரசம் போன்றே இருக்கும் யாக்வா, கஞ்சியை ஜுக் என்று சொல்கிறார்கள், இடியாப்பத்தை மைரோன் என்று சொல்கிறார்கள்’’என்று கூறியுள்ளார்.

ஆனால் மற்றொரு ஆராய்ச்சியாளர் கார்த்திக் மல்லி, ‘’ வரலாற்றைப் பார்த்தால், தமிழ் -கொரிய நாடுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்புகள் இருப்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ் வணிகர்கள் சீனாவில் கட்டிய ஒரு இந்துகோவில் மற்றும் கல்வெட்டுகளை கண்டுபிடித்ததன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையே வணிக உறவு ஏற்பட்டது. ஆனால் அதுபோன்ற உறவுகள்கூட தமிழ் -கொரிய நாடுகளுக்கு இடையே இல்லை’’ என கூறியுள்ளார்.

courtesy - the news minute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com