\
ஜப்பான் தமிழ் சர்வதேசப் பட விழாவில் திரையிடப்படும் சில்லுக் கருப்பட்டி

ஜப்பான் தமிழ் சர்வதேசப் பட விழாவில் திரையிடப்படும் சில்லுக் கருப்பட்டி

ஜப்பான் தமிழ் சர்வதேசப் பட விழாவில் திரையிடப்படும் சில்லுக் கருப்பட்டி
Published on

தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற படம் ஹலிதா ஷமீம் இயக்கிய சில்லுக் கருப்பட்டி. 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், ஜப்பானில் நடைபெறும் ஒசாகா தமிழ் சர்வதேசப் படவிழாவில் திரையிடப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹலிதா ஷமீம் 

கடந்த 2019-ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வாகியுள்ள சில்லுக் கருப்பட்டி, நவம்பர் 1 ஆம் தேதியன்று ஒசாகா திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இதுபற்றிய மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ள இயக்குநர் ஹலிதா ஷமீம், "இது எத்தனை அழகானது, ஜப்பான் திரைப்பட விழாவுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட தேர்வானது பற்றி படத்தில் நடித்துள்ள நடிகை சுனைனாவும் ட்விட்டரில் உற்சாகமாக பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே டோரண்டோ உலகப் பட விழாவில் சில்லுகருப்பட்டி படத்திற்காக சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படம் என்ற நடுவர்களின் விருதுகளைப் பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com