'ஷாப்பிங்' சென்றால் காத்திருக்கும் கணவர்களுக்கு பொழுதுபோக்கு மையம்
மனைவி ஷாப்பிங் செல்லும்போது கணவர்களுக்கு ஃபோரடிக்காமல் இருக்க 'ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ்' என்ற பொழுதுபோக்கு மையங்களை சீனாவை சேர்ந்த ஒரு ஷாப்பிங் மால் அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் அமைந்துள்ள க்ளோபல் ஹார்பர் என்ற ஷாப்பிங் மாலில், மனைவி ஷாப்பிங் செல்லும் போது கணவர்களுக்கு போர் அடிக்காமல் இருக்க பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கண்ணாடியால் ஆன இருக்கை, திரை, கணினி மற்றும் கேம்பேட் போன்ற பல விளையாட்டு சாதனங்கள் அடங்கிய பல அம்சங்கள் உள்ளன. 1990-களில் மிகவும் பிரபலமான ரெட்ரோ கேம்களையும் இதில் விளையாடலாம். கணவர்களுக்காக வழங்கப்படும் இந்த சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இனிவரும் மாதங்களில் இந்த சேவை இலவசமாக வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மனைவி உடன் ஷாப்பிங் செய்தது போலவும் இருக்கும், அதேநேரம் பொழுதுபோக்காகவும் இருக்கும் என ஷாப்பிங் மால் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் மனைவிகள் இதை எதிர்க்கின்றனர்.
ஷாப்பிங் செல்லும்போது எனது கணவர் என்னுடன் இருக்க வேண்டுமே தவிர கேம் விளையாடுவதற்கு நாங்கள் அவர்களை அழைத்து வரவில்லை என்று கூறியுள்ளனர்.