\
டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்புதிய தலைமுறை

டொனால்டு ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு?

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Published on

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ஃப் கிளப்பில், ட்ரம்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரை குறிவைத்து கிளப்பிற்கு வெளியே இருந்து ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில், ட்ரம்பிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அவர் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைவதற்குள், அந்த நபர் அங்கிருந்து காரில் தப்பிச்செல்லவே, அவரை துரத்திப்பிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டொனால்டு ட்ரம்ப்
உலகின் அசுரத்தனமான ’பாடி பில்டர்’ இலியா யெஃபிம்சிக் மாரடைப்பால் மரணம்; Followers அதிர்ச்சி!

இந்த சம்பவம் குறித்து, சிறப்பு பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாகாணத்தில் பரப்புரையில் ஈடுபட்டபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் காயமடைந்தார். இந்நிலையில், அவர் இருந்த பகுதியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது, அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com