என்ன வந்துகிட்டே இருக்கு! பெண்ணின் கண்ணுக்குள் இருந்து 23 லென்ஸ்கள் அகற்றம் - வைரல் வீடியோ

என்ன வந்துகிட்டே இருக்கு! பெண்ணின் கண்ணுக்குள் இருந்து 23 லென்ஸ்கள் அகற்றம் - வைரல் வீடியோ
என்ன வந்துகிட்டே இருக்கு! பெண்ணின் கண்ணுக்குள் இருந்து 23 லென்ஸ்கள் அகற்றம் - வைரல் வீடியோ

அமெரிக்காவில் ஒரு பெண்ணின் கண்களுக்குள் இருந்து 23 காண்டாக்ட் லென்ஸ்களை மருத்துவர் ஒருவர் அகற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.

ஞாபக மறதி யாருக்குத்தான் இல்லை. சில நேரங்களில் வெளியே சென்றுவிட்டு பொருட்கள் வாங்க மறந்து வந்திருப்போம். எங்கே எதை வைத்தோம் என்பதை அடிக்கடி மறப்போம். ஏன் சில நேரங்களில் சாப்பிட கூட மறந்துவிடுவோம். ஆனால் ஒருவர் கண்களுக்குள் லென்ஸ் வைத்திருப்பதை மறந்து மறுநாள் வேறு லென்சை வைப்பார்களா? அப்படியே மறந்தாலும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் அது நடக்குமா? பலநாட்கள் கண்களுக்குள் லென்ஸ் வைத்தை மறந்து கடைசியில் மருத்துவரை அணுகியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர் கத்ரினா குர்தீவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒரு பெண்ணின் கண்களுக்குள் இருந்து அடுக்கடுக்காக அடுத்தடுத்து லென்ஸ்களை வெளியே எடுக்கும் வீடியோ அது. இப்படி 23 லென்ஸ்களை அகற்றியுள்ளார் அந்த மருத்துவர்.

அந்த வீடியோவில், ’’ஒருவரின் கண்ணில் இருந்து 23 காண்டாக்ட் லென்ஸ்களை எடுத்தல். இது எனது க்ளினிக்கில் நிஜத்தில் எடுக்கப்பட்ட வீடியோ. காண்டாக்ட் லென்ஸ்களுடன் தூங்காதீர்கள்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார் டாக்டர் கத்ரினா.

இது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வுதான். இரவு தூங்கப்போகும்முன் கண்களில் வைத்திருந்த காண்டாக்ட் லென்சை அகற்ற மறந்து மறுநாள் காலை புதிய லென்சை கண்களுக்குள் வைத்துள்ளார் சிகிச்சைக்கு சென்ற அந்த பெண். இப்படி ஒரு நாளல்ல; தொடர்ந்து 23 நாட்கள் செய்துவந்துள்ளார். இதனால் தூங்கி எழும்போது முந்தையநாள் வைத்த லென்ஸ் கண்ணிமைகளின் மேற்பகுதியில் சொருகியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு நாளும் சேர்ந்து, மொத்தம் 23 லென்ஸ்கள் கண்களுக்குள் இருந்து உறுத்தியுள்ளது. மிகுந்த அசௌகர்யத்தை உணர்ந்த அந்த பெண் மருத்துவரை அணுகியபோதுதான் தனது ஞாபக மறதி குறித்து அவருக்கு தெரியவந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 2.9 மில்லியன் பேர் அந்த வீடியோ பார்த்துள்ளனர். 81,000 பேர் லைக் செய்துள்ளனர். அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்த பலரும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு லென்ஸுக்கு பதிலாக கண் கண்ணாடியை பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளனர்.

கண்ணுக்குள் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்களை மிகுந்த கவனத்துடன் வெளியே எடுக்கும் புகைப்படங்களையும் கத்ரினா மற்றொரு பதிவில் பகிர்ந்துள்ளார். அதில், ‘’நான் மிகவும் கவனமாக அனைத்து காண்டாக்ட் லென்ஸ்களையும் வெளியே எடுத்தேன். எண்ணிப்பார்த்ததில் அவை மொத்தம் 23 இருந்தது. காண்டாக்ட் லென்ஸ்களைப் பிரிக்க, நான் ஒரு மிக நுண்ணிய அறுவை சிகிச்சை கருவியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அவை ஒருமாதம் கண்னிமைக்கு அடியில் இருந்ததால் நன்றாக ஒட்டியிருந்தன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com