5 அடி முழு முதலையை விழுங்கிய மலைப்பாம்பு கருணைக்கொலை - திகிலூட்டும் வீடியோ

5 அடி முழு முதலையை விழுங்கிய மலைப்பாம்பு கருணைக்கொலை - திகிலூட்டும் வீடியோ
5 அடி முழு முதலையை விழுங்கிய மலைப்பாம்பு கருணைக்கொலை - திகிலூட்டும் வீடியோ

ஃப்ளோரிடாவில் பர்மிஸ் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் ஒரு பெரிய முழு முதலை இருந்தது கண்டறியப்பட்டது. இந்த வீடியோ இணையங்களில் பரவி பலரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.

எவர்க்ளேட்ஸில் 18 அடி பர்மிஸ் மலைப்பாம்பை அதன் ஊழியர்கள் கருணைக்கொலை செய்துள்ளனர். காரணம் அந்த மலைப்பாம்பு 5 நீளமுடைய முழு முதலையை விழுங்கியதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறது. எவர்க்ளேட்ஸில் பர்மிஸ் மலைப்பாம்புகளின் நடமாட்டம் அதிகம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஃப்ளோரிடா மலைபாம்பு சேலன்ஞ் நிகழ்ச்சியின்மூலம் நூற்றுக்கணக்கான மலைப்பாம்புகள் அந்த பகுதியிலிருந்து அகற்றப்பட்டன.

இந்நிலையில் புவி விஞ்ஞானி ரோஸி மூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடூரமான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அது அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.

View this post on Instagram

A post shared by Rosie Moore (@rosiekmoore)

செவ்வாய்க்கிழமை இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அந்த வீடியோவில், மலைப்பாம்பின் வயிறு எந்த அளவுக்கு வீங்கியிருக்கிறது என்பதை பரிசோதித்து, பாம்பின் வயிறை கிழித்து முழு முதலையை அப்படியே வெளியே எடுக்கின்றனர். இந்த வீடியோ பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது.

View this post on Instagram

A post shared by Rosie Moore (@rosiekmoore)

ஃப்ளோரிடாவிலுள்ள பர்மீஸ் மலைப்பாம்புகளை கருணைக்கொலை செய்யவேண்டும் என புவி விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com