இப்படியெல்லாமா இருக்கும்? மனைவிகளை அடமானம் வைத்தாரா சவுதி இளவரசர்?

இப்படியெல்லாமா இருக்கும்? மனைவிகளை அடமானம் வைத்தாரா சவுதி இளவரசர்?

இப்படியெல்லாமா இருக்கும்? மனைவிகளை அடமானம் வைத்தாரா சவுதி இளவரசர்?
Published on

சவுதி அரேபியாவின் இளவரசர் சூதாட்டத்தில் தோற்றதால் தனது 5 மனைவிகளை அடமானம் வைத்துவிட்டதாக, நம்புவதற்கே கடினமாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. 

சவுதி அரேபியாவின் இளவரசர் மஜீத் பின் அப்துல்லா கடந்த சில நாட்களுக்கு முன்பு எகிப்து நாட்டில் உள்ள சினாய் கிராண்ட் கேசினோவில் சூதாட்டத்தில் ஈடுபட்டாராம். சுமார் 6 மணி நேரம் விளையாடிய இந்த ஆட்டத்தில், மில்லியன் கணக்கில் பந்தயம் கட்டி விளையாடினாராம். இதில் அவர் சுமார் 2000 கோடி (359 மில்லிய்ன டாலர்) அளவுக்கு தோற்றுள்ளார். இதையடுத்து, தோற்றதற்காக பணத்தை கட்டிய அப்துல்லா, மீதி 25 மில்லியன் டாலர்கள் கட்ட முடியாமல் தவித்ததாகவும், இதற்கு பதிலாக தனது 5 மனவிகளை அடமானம் வைத்துவிட்டு தனது நாட்டிற்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. 
இதுவரை சூதாட்டத்தில் தோற்றால் பணம், நகை, பொருட்கள், மட்டுமின்றி தனது ஒட்டகங்கள், குதிரைகளை கூட அடமானமாக வைத்துவிட்டு செல்வதுண்டு. ஆனால் மனைவியை அடமானமாக வைத்து விளையாடுவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இந்த செய்தி வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com