அமெரிக்கா | சட்டவிரோத குடியேறிகள் கை விலங்கிட்டு நாடு கடத்தல்.. அதிர்ச்சி வீடியோ
அமெரிக்காவில் டிரம்ப் பதவியேற்றதும், பல சட்டத்திட்டங்களில் மாறுதலை ஏற்படுத்தினார். அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் சம்பவத்தில் இந்தியர்கள் 104 பேரை கைவிலங்கு மற்றும் கால்விலங்கிட்டு, அமெரிக்க விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்,
சொந்த நாட்டிற்கு ஒரு கைதி போல இந்தியர்கள் அனுப்பப்பட்ட விவகாரம் நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்கா காலம்காலமாக கடைபிடித்து வரும் நடைமுறை இது என நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இது குறித்து அந்நாட்டுடன் பேசுவதாக தெரிவித்திருந்தார்.
இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறினர் என்று சட்டப்படி நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் இந்தியர்கள் ஆகவே அவர்களை விலங்கிடாமல் மரியாதையுடன் மனிதாபிமான முறையில் அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையைத்தான் தொடர்ச்சியாக இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் மக்களை கை விலங்கிடும் புதிய வீடியோ ஒன்றை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு இந்த கதிதான் ஏற்படும் என எச்சரிக்கும் ரீதியில் இவ்வீடியோ வெளியிடப்பட்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.