உலகம்
பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
பாகிஸ்தானில் யூ ட்யூபில் வீடியோக்களை பதிவிட்டு வரும் இளம் பெண்ணை, அந்நாட்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சியின்போது 400 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
பாகிஸ்தானின் மினாரி பூங்காவில் நடந்த சுதந்திர தின விழாவின்போது, அந்த இளம் பெண், தனது நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த பெண்ணுக்கு சில இளைஞர்கள் தொல்லை கொடுக்கத் தொடங்கிய நிலையில், கூட்டத்தில் இருந்த மற்றவர்களும் சேர்ந்து அந்த பெண்ணை துன்புறுத்தினர்.
பெண்ணின் உடன் வந்த 6 பேரையும் தாக்கி விரட்டிய நிலையில், 400 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.