\
Ships carrying diesel from Russia to US suddenly changed their course
TrumpReuters

திடீரென பயணத்தை மாற்றிய கப்பல்கள்.. பெரும் சிக்கலில் அமெரிக்கா : டிரம்புக்கு அடுத்த பின்னடைவு!

அமெரிக்காவுக்கு ரஷ்யாவில் இருந்து டீசல் கொண்டுசென்ற கப்பல்கள் திடீரென தங்கள் பயணத்தை மாற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

அமெரிக்கா - ஈரான் போர் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், அமெரிக்காவில் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த மாதம் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை குறைத்துக்கொண்டு டிரம்ப், ரஷ்யா உலக நாடுகளுக்கு டீசல் விற்பனை செய்ய விதித்திருந்த தடைகளை திரும்பப்பெற்றார்.

அதோடு ரஷ்யா அமெரிக்காவிற்கு உடனடியாக 3 லட்சம் டன் டீசலையும், அதைத் தொடர்ந்து மாதம் 5 லட்சம் டன்களையும் ரஷ்யா வழங்கும் என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்றும் டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் அமெரிக்காவிற்கு ரஷ்ய டீசலை ஏற்றி 3 பெரும் கப்பல்கள் தங்கள் பயணத்தை தொடங்கியது.

Putin
PutinReuters

ஆனால், டிரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. நியூஜெர்சி மாகாணத்தின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் மிகி ஷெரில் (Mikie Sherrill), ரஷ்ய டீசலை இறக்கும் துறைமுகங்கள் மற்றும் முனையங்களுக்கு பல மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், அமெரிக்காவில் உள்ளூர் சட்டங்கள், தடைகள் மற்றும் அரசியல் எதிர்ப்புகள் காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் துறைமுகங்கள் இந்த ரஷ்ய டீசலை இறக்குமதி செய்ய மறுத்துவிட்டன. இதன் காரணமாக அமெரிக்காவிற்கு ரஷ்ய டீசலை ஏற்றிச் சென்ற 3 கப்பல்களில் 2 கப்பல்கள் தங்களின் பயணப் பாதையை மாற்றி வேறு நாடுகளை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Reuters

ஹாங்காங் நிறுவனத்திற்குச் சொந்தமான லெருவோ (Leruo) என்ற கப்பல் அமெரிக்காவிற்குப் பதிலாக பிரேசிலை நோக்கி தனது பயணத்தை மாற்றியுள்ளது. அதே போல மேற்கத்திய நாடுகளால் தடை செய்யப்பட்ட ரஷ்யக் கப்பலான தலிஸ்மேன் (Talisman) அல்ஜீரியா கடற்கரையை நோக்கி தனது பயணத்தை மாற்றியுள்ளது. மற்றொரு முக்கிய கப்பலான அஜியோய் ஃபனண்டெஸ் (Agioi Fanendes) அமெரிக்காவை நோக்கிய தனது பயணத்தை பாதியிலே நிறுத்தி வேறு நாடுகளுக்கு திருப்பிவிடப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இது டிரம்ப் அரசுக்கு மற்றொரு பின்னடைவாக மாறியுள்ள நிலையில், இதனால் அமெரிக்காவின் டீசல் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Ships carrying diesel from Russia to US suddenly changed their course
போல்சனேரோ, நெதன்யாகு, ட்ரம்ப்.. 1 வாரத்தில் 3 மாபெரும் தோல்விகள்.. வீழ்ந்த வலதுசாரி தலைவர்கள்!