'ஷின்சோ அபேவின் உடல்நிலை கவலைக்கிடம்' - ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா

'ஷின்சோ அபேவின் உடல்நிலை கவலைக்கிடம்' - ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா

'ஷின்சோ அபேவின் உடல்நிலை கவலைக்கிடம்' - ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா
Published on

துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, நரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்தார். அவரின் நெஞ்சு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. ஷின் சோ அபே தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். துப்பாக்கியால் சுட்டதாக கருதப்படும் நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் ஜப்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த துப்பாக்கி சூடு ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஷின்சோ அபேவின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா, ''துப்பாக்கியால் சுடப்பட்ட ஷின்சோ அபேவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரம் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர் உயிர் பிழைப்பார் என்று நான் நம்புகிறேன்; பிரார்த்தனை செய்கிறேன். முன்னாள் பிரதமரை துப்பாக்கியால் சுட்டது காட்டு மிராண்டித்தனமான செயல்; இதை ஏற்றுக் கொள்ள முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் ஷின்சோ அபே. 2012ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 3 முறை இவர் பிரதமர் பதவியை அலங்கரித்து வந்தார். மொத்தமாக ஜப்பானின் பிரதமராக இவர் 4 முறை இருந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார். இந்தியாவுடன் அதிக நெருக்கத்தை காட்டி வந்த அபே, பலமுறை இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளார்.

இதனிடையே ஷின்சோ அபே மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கவலையை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ''எனது அருமை நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும், அவரது குடும்பத்தினருடனும், ஜப்பான் மக்களுடனும் எப்போதும் இருக்கும்'' என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாம்: ’எதிர்பாக்கலல.. இப்டி வருவனு எதிர்பாக்கலல’ -புறாவை தாக்க போன பூனையின் வியக்கத்தகு செயல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com