\
ஜப்பான் தேர்தல்: மீண்டும் பிரதமர் ஆகிறார் அபே!

ஜப்பான் தேர்தல்: மீண்டும் பிரதமர் ஆகிறார் அபே!

ஜப்பான் தேர்தல்: மீண்டும் பிரதமர் ஆகிறார் அபே!
Published on

ஜப்பான் தேர்தலில் அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே மீண்டும் பிரதமர் ஆவார் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஜப்பானின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஷின்ஜோ அபே. இவருடைய பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து இன்று தேர்தல் நடக்கிறது. வாக்கு பதிவு இன்று காலை தொடங்கியது. ஜப்பானில் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் சூறாவளி காற்று வீசி வருகிறது. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமானோர் வாக்களிக்க வர மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. வாக்குப் பதிவு குறைந்தாலும் அது இப்போதைய பிரதமர் அபே-வுக்கு சாதகமாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.  இந்த தேர்தலில் அபே மீண்டும் வெற்றிபெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அவர் வெற்றிப்பெற்றால் நீண்ட காலம் பதவி வகிக்கும் பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com