பாலைவனத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய துபாய் மன்னர்!
துபாய் அருகே பாலைவனத்தில் சிக்கிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை, துபாய் மன்னர் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாய்-க்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் செல்லும் அவர்கள் பாலைவனத்தில் செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஹன்னா கரேன் அர்ரோயோ என்ற வெளிநாட்டுச் சுற்றுலா பயணி காரில் துபாய் அருகே பாலைவனம் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கார் பாலவனத்தில் மணலில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த துபாய் மன்னரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் மக்தூம் தனது காரை நிறுத்தி, அவர்கள் காரை மீட்க உதவியுள்ளார். இத் தகவலை ஹன்னா கரேன் அர்ரோயோ புகைப்படத்துடன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
துபாய் இப்படி உதவி செய்வது புதிதில்லை. இதற்கு முன்னும் இதே போன்று சில உதவிகளை செய்துள்ளார்.