30 மீட்டர் நகர்த்தப்பட்ட 135 ஆண்டு பழமை வாய்ந்த புத்தர் ஆலயம் !

30 மீட்டர் நகர்த்தப்பட்ட 135 ஆண்டு பழமை வாய்ந்த புத்தர் ஆலயம் !
30 மீட்டர் நகர்த்தப்பட்ட 135 ஆண்டு பழமை வாய்ந்த புத்தர் ஆலயம் !

சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்த 135 ஆண்டுகள் பழமையான புத்தர் ஆலயம் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.   

சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 1882-ம் ஆண்டு கட்டப்பட்ட யுஃபூ புத்தர் ஆலயம் 135 ஆண்டுகள் பழைமையானது ஆகும். இந்த ஆலயத்தினுள் 3 மிகப்பெரிய புத்தர் சிலைகள் உள்ளன. இந்த ஆலயம், 2000 டன் எடை கொண்டதாகும். இங்கு வருடத்திற்கு சுமார் 15 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த ஆலயத்திற்கு வருடந்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையிலும் பாதுகாப்பு கருதியும், இந்த ஆலயம் வேறு இடத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஆலயம் இருந்த இடத்திலிருந்து 30.66 மீட்டர் தூரம் நகர்த்தப்பட்டுள்ளதுடன், 1.05 மீட்டர் அளவு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் 2 வாரங்களுக்குள் நடைபெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com