\
ஷாஹீன் புயல்: ஓமன் நாட்டில் பெய்யும் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஷாஹீன் புயல்: ஓமன் நாட்டில் பெய்யும் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஷாஹீன் புயல்: ஓமன் நாட்டில் பெய்யும் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

ஷாஹீன் புயல் காரணமாக, ஓமன் நாட்டில் பலத்த மழை பெய்து வருவதால் கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரபிக்கடலில் உருவான ஷாஹீன் புயல், ஓமன் நாட்டில் கரையை கடந்தது. புயல் காரணமாக ஒமனில், சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை பெய்தது. சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், நீரில் ஒரு குழந்தை அடித்துச் செல்லப்பட்டு இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புயல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் அவசர ஊர்திகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெரும் சேதங்களை தவிர்க்கும் வகையில், கடலோரப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com