ட்ரம்ப் கட்சி வேட்பாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்

ட்ரம்ப் கட்சி வேட்பாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்

ட்ரம்ப் கட்சி வேட்பாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்
Published on

அமெரிக்காவின் அலபாமா செனட் தேர்தலுக்காக குடியரசுக் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ராய் மூர் மீது ஐந்தாவதாக மேலும் ஒரு பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அலபாமா செனட் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் ட்ரம்ப் பதவி வகிக்கும் குடியரசுக் கட்சியின் சார்பில் ராய் மூர் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மீது இதுவரை 4 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஐந்தாவதாக பெவர்லி யங் நெல்சன் என்ற பெண்மணி பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகாரில் தனக்கு 16 வயது இருக்கும்போது ராய் மூர் பாலியல் தொல்லை கொடுத்தாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ராய் மூர் முற்றிலுமாக ‌மறுத்துள்ளார். அதேசமயம் குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள்‌ குழு தலைவராக உள்ள எம்.பி காரி கார்ட்னர், பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் புகார்களை தெரிவித்து வருவதாகவும், அதில் பொய் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 
அத்துடன் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை மூர் வாபஸ் பெறாமல் வெற்றி பெற்றாலும், அவரை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விடுவோம் என்றும் கோரி கார்ட்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com