பாலியல் குற்றச்சாட்டு: போப்பின் ஆலோசகர் நீதிமன்றத்தில் ஆஜர்

பாலியல் குற்றச்சாட்டு: போப்பின் ஆலோசகர் நீதிமன்றத்தில் ஆஜர்

பாலியல் குற்றச்சாட்டு: போப்பின் ஆலோசகர் நீதிமன்றத்தில் ஆஜர்
Published on

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் போப்பின் ஆலோசகரும் வாட்டிகன் பொருளாளருமான கார்டினல் ஜார்ஜ் பெல் நீதிமன்றத்தில் முதல் முறையாக ஆஜரானார். 
அவரிடம் 5 நிமிடம் மட்டும் விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

போப் பிரான்ஸ்சின் ஆலோசகரும் ஆஸ்திரேலியாவின் மூத்த கத்தோலிக்க மத போதகருமான கார்டினல் ஜார்ஜ் பெல் மீது அவரின் சொந்த நாடான ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றம்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. 1970 மற்றும் 1980 ஆண்டுகளில் அவர் பாலியல் ரீதியாக சிலரிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதன்பேரில் ஆஸ்திரேலிய காவல்துறையினர்  குற்றச்சாட்டுப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com