பாகிஸ்தானில் அடுத்தடுத்து கேட்ட குண்டுவெடிப்பு சத்தம்; உச்சகட்ட பரபரப்பு!
பாகிஸ்தானின் கிழக்கு எல்லையோர பகுதியில் அமைந்துள்ள மூன்றாவது பெரிய நகரமும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளதுமான லாகூரில் கோபால் நகர், நசீராபாத் மற்றும் வால்டன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளின் அருகே குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
மேலும், பாகிஸ்தானின் லாகூரில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் பல செய்தி வெளியிட்டிருந்தது. இதனை ராய்ட்டர்ஸ் செதி நிறுவனமும் உறுதி செய்திருக்கிறது. இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், புகை மூட்டத்தால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பீதியில் வெளியே ஓடும் காட்சிகள் காணப்படுகின்றன. இவை நகரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசித்துவரும் மக்கள் பீதியடைந்துள்ளன.
பாகிஸ்தான் ராணுவ கன்டோன்மெண்ட் அருகே வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டதால் அங்கு பரபரப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்த பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, லாகூர் மற்றும் சியால்கோட் பகுதிகளில் உள்ள விமான வழித்தடங்கள் வணிக விமான தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மேலும், ட்ரோன் தாக்குதல் தொடர்பான தகவல்களும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. எவ்வளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த தாக்குதலை இந்தியா ராணுவம் நடத்தியதா? என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தற்போது, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்