\
கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக வந்த Airpodஐ விழுங்கிய 7வயது சிறுவன்!

கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக வந்த Airpodஐ விழுங்கிய 7வயது சிறுவன்!

கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக வந்த Airpodஐ விழுங்கிய 7வயது சிறுவன்!
Published on

கிறிஸ்துமஸ் பரிசாக வந்தாக ஏர்பாட்-ஐ (Airpod) 7 வயது சிறுவன் விழுங்கிய சம்பவம் ஜோர்ஜியாவில் நடந்துள்ளது.

ஜோர்ஜியாவைச் சேர்ந்த கியரா ஸ்ராடு என்ற பெண், தன்னுடைய 7 வயது மகனான Qக்கு ஆப்பிள் போனும், அதனுடன் இரு ஏர்பாட்களையும் (Airpod)பரிசாக வழங்கியுள்ளார். கிறிஸ்துமஸ் முடிந்து மூன்று நாட்களில் ஒரு ஏர்பாடை அந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக விழுங்கியுள்ளார். இதனைக்கண்ட தாய் கியரா, மகனை அழைத்துகொண்டு மருத்துவமனை விரைந்துள்ளார். எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள் வயிற்றில் ஏர்பாட் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

user

ஆரம்பக்கட்ட சிகிச்சை அளித்துள்ள மருத்துவர்கள் இயற்கை உபாதை வழியாகவே அது வெளியேறும் எனக்கூறி அதற்கான சிகிச்சையும் அளித்துள்ளனர். இது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தாய் கியரா, நண்பர்களின் வேண்டுதல்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட அவர், வயதாகும் வரை குழந்தைகளுக்கு செல்போன் போன்ற விலை உயர்ந்த அன்பளிப்பு தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com