ஆப்கானிஸ்தான்: மினி பேருந்தில் குண்டு வெடித்து 7 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான்: மினி பேருந்தில் குண்டு வெடித்து 7 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான்: மினி பேருந்தில் குண்டு வெடித்து 7 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் மினி பேருந்தில் குண்டு வெடித்ததில் 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். ஹெராத் நகரில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

மினி பேருந்தின் பெட்ரோல் டேங்க்கில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மினி பேருந்தில் இருந்தவர்களில் 7 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் 9 பேர் படுகாயமுற்றனர். வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com