\
செரீனா வில்லியம்ஸின் கர்ப்பிணி லுக்

செரீனா வில்லியம்ஸின் கர்ப்பிணி லுக்

செரீனா வில்லியம்ஸின் கர்ப்பிணி லுக்
Published on

டென்னிஸ் புயல் செரீனா வில்லியம்ஸ் களத்தில் மட்டும் சாம்பியன் இல்லை. பேஷன் துறையிலும் தீராத ஆர்வம் கொண்டவர். விதவிதமான ஆடை அணிவதில் ஆர்வம் கொண்ட செரீனா, கர்ப்ப கால ஆடைகள் அணிந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

கர்ப்ப காலத்தில் விதவிதமான உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வெளியிடுவது செலிபிரிட்டிகளின் வழக்கம். இந்தியாவில் இந்த பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. உதாரணமாக ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் கான் போன்றவர்கள் இதுபோன்ற போட்டோ ஷூட்களை எடுத்துள்ளனர். கரீனா கபூர் நிறை மாதமாக இருக்கும்போதும் பாரம்பரிய உடைகள் அணிந்து பேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்தார்.

அதுபோல டென்னிஸ் புயல் செரீனா வில்லியம்ஸும் கர்ப்ப கால உடையில் புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 5 மாத கர்ப்பிணியாக உள்ள செரீனா வில்லியம்ஸ், ஸ்நாப்சாட் நிறுவனர் அலெக்சிஸ் ஒஹானியனைக் காதலிக்கிறார். இருவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரோம் நகரில் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com