\
மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 47 கிலோ கஞ்சா... இலங்கை கடற்படையினர் தீவிர விசாரணை!

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 47 கிலோ கஞ்சா... இலங்கை கடற்படையினர் தீவிர விசாரணை!

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 47 கிலோ கஞ்சா... இலங்கை கடற்படையினர் தீவிர விசாரணை!
Published on

இலங்கை மன்னார் கடற்கரை பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 47 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், இதை யார் அங்கு வைத்தது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை மன்னார் கடற்கரை பகுதியில் கஞ்சா புதைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினருக்கு ரகசிய தகவல்களை கிடைத்துள்ளது.

இதையடுத்து மன்னார் கடற்கரை பகுதியில் இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணி ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 47 கிலோ கஞ்சாவை கைப்பற்றப்பட்டுது. இதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா தமிழகத்திலிருந்து கொண்டுவந்துள்ளனர். மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டு வருவதாக கடற்படையினர் கூறியுள்ளனர். கடற்படையினர் ரோந்து வருவதைக் கண்ட கடத்தல்காரர்கள்தான் கஞ்சாவை மண்ணுக்குள் புதைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எதுவாகினும் விசாரணை முடிவில்தான் உண்மைத்தகவல் தெரியவருமென சொல்லப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com