“படத்தை பாருங்கள்... ஆனால்”- ஸ்பைடர்மேன் திரைப்படக் குழுவின் அன்பான வேண்டுகோள்

“படத்தை பாருங்கள்... ஆனால்”- ஸ்பைடர்மேன் திரைப்படக் குழுவின் அன்பான வேண்டுகோள்

“படத்தை பாருங்கள்... ஆனால்”- ஸ்பைடர்மேன் திரைப்படக் குழுவின் அன்பான வேண்டுகோள்
Published on

“ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்” இந்தியா உட்பட உலக நாடுகளில் வெளியாகி உள்ளது. ஸ்பைடர் மேன் திரைப்பட வரிசையில் இந்தப் படம் லேட்டஸ்ட். டாம் ஹாலண்ட், ஜெண்டயா, பெனடிக்ட் கம்பர்பேட்ச், ஜான் பெவ்ரோ, ஜேக்கப் படலோன், மரிசா டோமே என ஹாலிவுட் நட்சத்திரங்களின் பங்களிப்புடன் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. ஜோன் வாட்ஸ் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். 

இன்றைய டிஜிட்டல் உலகில் படத்தை பார்த்தவுடன் அது தொடர்பான ரிவ்யூகளை கொடுப்பது பலரது வழக்கம். இந்த நிலையில் அது தொடர்பாக ‘ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம்’ திரைப்படக் குழு அன்பான வேண்டுகோளை அனைவருக்கும் வைத்துள்ளது. 35 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் படத்தை அனைவரும் தியேட்டரில் பார்த்து மகிழுங்கள். அதே நேரத்தில் ஸ்பாய்லர் எதையும் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. அந்த வீடியோவிற்கு “See it, don’t spoil it!” என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஆக்டோபஸ் உட்பட ரசிகர்களின் பேவரைட் கதாப்பத்திரங்கள் இந்த படத்தின் கதையில் இடம்பெற்றுள்ளன. படம் குறித்து பாசிட்டிவான ரியாக்ஷன்கள் ரசிகர்களிடம் இருந்து வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com