\
சிறுமியை நீருக்குள் இழுத்த கடல் சிங்கம்

சிறுமியை நீருக்குள் இழுத்த கடல் சிங்கம்

சிறுமியை நீருக்குள் இழுத்த கடல் சிங்கம்
Published on

கனடாவின் வான்கூவர் பகுதியில், மீன்பிடித் துறைமுகத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை நீருக்குள் இழுத்துச்சென்ற கடல்சிங்கத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

கனடா நாட்டின் வான்கூவர் பகுதியில், கடல் சிங்கம் ஒன்று வேடிக்கை பார்க்க வந்த சிறுமியை நீருக்குள் இழுத்துச் சென்ற வீடியோபதிவு வெளியாகியுள்ளது.

ரிச்மாண்ட் நகரில் மீன்பிடித் துறைமுகம் ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த கடல் சிங்கத்திடம், பார்வையாளர்கள் பிரெட் துண்டுகளை வீசி சீண்டிக்கொண்டிருந்தனர்.

சற்றும் எதிர்பாராத வகையில் அந்தக் கடல்சிங்கம் துறைமுக விளிம்பில் அமர்ந்திருந்த சிறுமியின் ஆடையைப் பிடித்து நீருக்குள் இழுத்துச் சென்றது. உடனடியாக நீருக்குள் குதித்த நபர் அச்சிறுமியை ஆபத்து எதுவும் ஏற்படாமல் காப்பாற்றி வெளியே கொண்டு வந்ததால் அருகிலிருந்தவர்கள் நிம்மதியடைந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com