வெப்பத்தை உணரும் திறன்! ஏடிஸ் எகிப்டி கொசுவுக்கு இப்படியொரு தன்மையா? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு
டெங்கு நோயை ஏற்படுத்தும் ஏடிஸ் எகிப்டி ((Aedes Aegypti)) கொசு உடலின் வெப்பத்தை உணரும் திறன் மூலம் மனிதர்களைக் கடிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஏடிஸ் எகிப்டி கொசு முதன்மையாக வாசனையை முகரும் திறன் மூலமாகவே மனிதர்களைக் கடிக்கிறது. இதனால் ஏடிஸ் எகிப்டி கொசுவுக்கு முகரும் திறனை அளிக்கும் மரபணுவை விஞ்ஞானிகள் நீக்கினர். ஆனால் முகரும் திறன் நீக்கப்பட்ட ஏடிஸ் எகிப்டி கொசு மனித உடலின் வெப்பத்தை உணரும் திறனை வைத்து தமது வேலையைத் தொடர்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
முகர்வு திறன் நீக்கப்பட்ட கொசுக்களுக்கு வெப்பத்தை உணரும் திறன் அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நோய் எதிர்ப்பு செல்களான டி செல்களில் டெங்குவுக்கு எதிரான புதிய உட்பிரிவை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக டெங்குவுக்கு எதிராக வினைபுரியும் நோயெதிர்ப்பு செல்கள் உருவாக்கும் ஆண்டிபாடிகள் நோயிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல் சில நேரங்களில் நோயை தீவிரப்படுத்தவும் செய்யும். டி செல்களில் பாதுகாப்பை அளிக்கும் செல்களை சரியாகக் கண்டறிவது டெங்குவுக்கான சிறந்த தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.