ஆஸ்திரேலிய பாலைவனத்தில் ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பவளப்பாறை கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய பாலைவனத்தில் ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பவளப்பாறை கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலிய பாலைவனத்தில் ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பவளப்பாறை கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பாலைவனத்தின் நடுவில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நுல்லார்போர் பாலைவனத்தில் பவளப்பாறையின் எச்சங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நுல்லார்போர் பாலைவனம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. மேலும் தற்போது தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பவளப்பாறைகள் சுமார் 14 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்துள்ளது. இந்த பவளப்பாறைகள் மண்ணில் புதைந்து அதன் மேல்  76,000 சதுர மைல் பரப்பளவில் சுண்ணாம்புக் கற்கள் கொண்டு மூடி இருக்கிறது. இந்த பவளப்பாறைகள் 3,950 முதல் 4,250  அடி வரை உயரம் கொண்டதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் 18 சதவீத நிலப்பரப்பு பாலைவனமாக உள்ளது. இந்த பாலைவனம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெருங்கடல் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் அந்த கடல்பகுதியில் இந்த பவளப்பாறைகள் உருவாகியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலில் பாசியினங்கள் வாழ்ந்து மடிந்து, படிந்து பவளப்பாறைகளாக உருவாகின்றன. பல லட்சம் ஆண்டுகளின் தொடர் நிகழ்வாக பவளப்பாறைகள் உருமாறுகின்றன.

இதையும் படிக்க: 'மகாராணியை பார்க்க உன் மனைவியை அழைத்து வராதே' - மகனுக்கு கண்டிஷன் போட்ட மன்னர் சார்லஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com