\
School Blast Kills 7 Students, Leaving Buildings Destroyed
afghan school blastreuters

பள்ளிக்கு அருகே பயங்கர வெடிவிபத்து! சிதறிய கட்டடம்.. சிதைந்த பிஞ்சு உயிர்கள்! 7 மாணவர்கள் ப**!

பள்ளிக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய பிஞ்சுக் குழந்தைகள், திடீரென நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

ராஜ்குமார். ர

பள்ளிக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய பிஞ்சுக் குழந்தைகள், திடீரென நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த இந்த வெடிவிபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

afghan school blast
afghan school blastreuters

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குனார் மாகாணத்தின் தலைநகரான அசாதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் ஷகாய் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. காலை சுமார் 10 மணியளவில் இந்தப் பள்ளிக்கு அருகே திடீரெனப் பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் பள்ளி மாணவர்கள் பலர் படுகாயமடைந்ததுடன், பள்ளிக் கட்டடத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்தது. வெடிவிபத்தில் காயமடைந்த குழந்தைகள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 99 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர்.

இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து தலிபான் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மதீன் கானி வெளியிட்டுள்ள முதற்கட்டத் தகவலின்படி, பள்ளிக்கு அருகே சுரங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே வெடிப்பு நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, சுரங்கப் பணிகளின்போதும் பாறைகளை வெடித்துத் தகர்க்கவும் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், வெடிபொருட்கள் எவ்வாறு வெடித்தன என்பது குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

School Blast Kills 7 Students, Leaving Buildings Destroyed
இருளில் மூழ்கிய நகரம்.. கடும் அச்சத்தில் 9 லட்சம் உயிர்கள்.. மிரட்டும் புயல்!