saudi sleeping prince still in coma after 20 years viral
அல் -வாலீத் பின் காலெத் பின் தலால்எக்ஸ் தளம்

20 ஆண்டுகளாக கோமா.. கண் விழித்தாரா சவூதியின் ’தூங்கும்’ இளவரசர்? வைரலாகும் வீடியோ.. உண்மை என்ன?

கோமா நிலையிலிருந்து இன்னும் மீளாத தூங்கும் இளவரசர் அல் -வாலீத், விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றனர்.
Published on

சவூதி அரேபியாவின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் அல் -வாலீத் பின் காலெத் பின் தலால். கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இவர், ’தூங்கும் இளவரசர்’ என்று அழைக்கப்படுகிறார். 2005ஆம் ஆண்டு அவர் ராணுவக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதுமுதல் அவர் கோமா நிலையை அடைந்தார். எனினும், அவரது குடும்பத்தினர் ரியாத் மருத்துவமனையில் அவரைவைத்து உயிர் காக்கும் கருவிகள் மூலம் கடந்த 20 ஆண்டுகளாகப் பாதுகாத்து வருகின்றனர்.

saudi sleeping prince still in coma after 20 years viral
அல் -வாலீத் பின் காலெத் பின் தலால்எக்ஸ் தளம்

2015ஆம் ஆண்டு, மருத்துவர்கள் அவரது உயிர்காக்கும் கருவியை அகற்ற வலியுறுத்தியும் அவரது தந்தை சம்மதிக்கவில்லை. ”ஓர் அதிசயம் நிகழும். விபத்தில் அவர் இறக்க வேண்டும் என்று கடவுள் விரும்பியிருந்தால், அவர் இப்போது அவரது கல்லறையில் இருந்திருப்பார். தன் மகன் ஒருநாள் நிச்சயம் மீண்டு வருவார்” என்ற நம்பிக்கையில் அவரைப் பாதுகாத்து வருகிறார்.

saudi sleeping prince still in coma after 20 years viral
சவுதி அரேபிய இளவரசர் பந்தர் காலமானார்

இதன் காரணமாகவே அவரை உயிர் காக்கும் கருவிகளுடன் மருத்துவர்களும் நன்கு கவனித்து வருகின்றனர். இதற்கிடையே, அவ்வப்போது அவர் உடலில் அசைவுகள் இருப்பதாக தகவல்கள் வரும். கடந்த 2019ஆம் ஆண்டுகூட அவர் விரலை உயர்த்தியதாகவும், தலையைத் திருப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் ஒருபோதும் கோமா நிலையிலிருந்து மீளவில்லை என்பதுதான் உண்மையான செய்தியாக இருக்கிறது.

இந்த நிலையில்தான் சமீபத்தில் அவர் கண் விழித்துப் பார்த்ததாகவும் குடும்பத்துடன் இணைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அவரைக் காண நிறைய பேர் காத்திருப்பது அந்த வீடியோவில் இருப்பது தெரிகிறது.

இதுகுறித்த வீடியோ ஒன்று வைரலானது. ஆனால், உண்மையில் அந்த வீடியோவில் இருந்தது தூங்கும் இளவரசர் அல்ல. மாறாக, சவுதி அரேபியாவின் கோடீஸ்வரர் மற்றும் மோட்டார் விளையாட்டு ஆளுமையான யாசீத் முகமது அல்-ராஜ்ஹி எனத் தெரிய வந்தது. ஆயினும், கோமா நிலையிலிருந்து இன்னும் மீளாத தூங்கும் இளவரசர் அல் -வாலீத், விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் அவருடைய பிறந்த நாள் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

saudi sleeping prince still in coma after 20 years viral
சவுதி அரேபியாவில் 11 இளவரசர்கள் கைது: பட்டத்து இளவரசர் அதிரடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com