சவூதியில் நடனம் ஆடிய பாடகர் கைது

சவூதியில் நடனம் ஆடிய பாடகர் கைது

சவூதியில் நடனம் ஆடிய பாடகர் கைது
Published on

சவுதி அரேபியாவில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது டேபிங் என்ற நடன சைகையை செய்ததற்காக அந்நாட்டு பிரபல பாடகர் அப்துல்லா அல் ஷஹானி கைது செய்யப்பட்டுள்ளார்.

டேபிங் நடனம் போதை கலாச்சாரத்துடன் தொடர்புடையதாக சவுதி அரேபியர்கள் கருதுவதால் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சமீபத்தில் இதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் தற்செயலாக டேபிங் செய்ததற்கு அரசிடமும், மக்களிடமும் ட்விட்டர் மூலம் அப்துல்லா அல் ஷஹானி மன்னிப்பு கோரியிருந்தார். இருப்பினும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சவுதி ‌அரேபியாவில் பிரபல ‌நபர் ஒருவர் 'டேபிங்' நடனம் ஆடியது இதுவே முதன் முறை எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com