இளவரசருடன் விமானத்தில் பறந்த 80 பருந்துகள்..!

இளவரசருடன் விமானத்தில் பறந்த 80 பருந்துகள்..!

இளவரசருடன் விமானத்தில் பறந்த 80 பருந்துகள்..!
Published on

சவூதிஅரேபிய இளவரசருடன், 80 பருந்துகள் விமானத்தில் பயணம் செய்த புகைப்படம் இணைய தளத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், ஏராளமான பருந்துகளை வளர்த்து வருகிறார். அண்மையில் அவர் விமானத்தில் பயணித்தபோது, அவருடன் சேர்ந்து அவர் வளர்த்த 80 பருந்துகளும் பயணம் செய்துள்ளன.

அந்த 80 பருந்துகளுக்கும் சவூதி இளவரசர் விமானத்தில் தனி இருக்கைகளை பதிவு செய்திருந்தார். விமானத்தின் அந்த இருக்கைகளில் அமர்ந்து பருந்துகள் பயணம் செய்தன. மேலும் அவை பறக்காமல் இருக்கும் வகையில் சீட்பெல்ட் போடப்பட்டிருந்தது. இப்புகைப்படங்களை விமானத்தில் இருந்த விமானி ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு நாடுகளின் தேசிய பறவையான பருந்துகள் குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளுக்கு செல்வதற்கு, தனியான கடவுசீட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com