43 வருடங்களில் 53 திருமணம் - 63 வயது சவுதி அரேபிய தொழிலதிபர் கூறும் வினோத காரணம்!

43 வருடங்களில் 53 திருமணம் - 63 வயது சவுதி அரேபிய தொழிலதிபர் கூறும் வினோத காரணம்!
43 வருடங்களில் 53 திருமணம் - 63 வயது சவுதி அரேபிய தொழிலதிபர் கூறும் வினோத காரணம்!

’திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’, ’ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது போன்ற பழமொழிகள் நமது ஊர்களில் மிகவும் பிரபலமானவை. தனது மனைவியைத் தாண்டி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தாலே நமது ஊரில் அது சட்டப்படி குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனது 63 வயதிற்குள் 53 திருமணங்களை செய்துகொண்டதை பெருமையாகக் கூறுகிறார் சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். தன்னுடைய ஸ்திரத்தன்மை மற்றும் மன அமைதியை கண்டறியவே 53 திருமணங்களை செய்துகொண்டதாகவும், தன்னுடைய சுய இன்பத்திற்கு அல்லவென்றும் கூறுகிறார் சவுதி அரேபியர் ஒருவர்.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அபு அப்துல்லா(63). இவரை இந்த ’’நூற்றாண்டின் பல தரப்பட்ட திருமணம் செய்தவர்’’ என்று அழைக்கின்றனர். ஏன் இத்தனை பெண்களை திருமணம் செய்தார்? திருமணத்தின்மீதான ஈடுபாடு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து சவுதி அரேபிய தொலைகாட்சி ஒன்றில் அவரே விளக்கியுள்ளார்.

’’இதுவரை நான் 53 பெண்களை திருமணம் செய்திருக்கிறேன். நான் 20 வயதாக இருந்தபோது முதல் திருமணம் செய்தேன். அந்த பெண் என்னைவிட 6 வயது மூத்தவர். முதன்முறை அவரை திருமணம் செய்தபோது இன்னொரு திருமணம் குறித்த எண்ணம் எனக்கு எழவில்லை. அவரிடம் சௌகர்யமாக உணர்ந்ததால் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டோம். ஆனால் சில வருடங்களில் எங்களுக்குள் சண்டை சச்சரவுகள் எழ ஆரம்பித்தது. அப்போதுதான் எனது முதல் மனைவியிடம் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாகக் கூறினேன். அதன்படி என்னுடைய 23வது வயதில் இரண்டாம் திருமணமும் செய்துகொண்டேன்.

ஆனால் எனது இரண்டு மனைவிகளுக்குமிடையே பிரச்னைகள் எழுந்தது. அதனை சமாளிக்கவே 3 மற்றும் 4ஆவது முறை திருமணம் செய்தேன். பின்னர் எனது முதல் 2 மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டேன். எனக்கு மகிழ்ச்சியை தரும் பெண்ணைத் தேடித் தேடியே பலமுறை திருமணம் செய்தேன். எனது மனைவிகளிடம் நான் நேர்மையாகவே இருக்க விரும்பினேன். இத்தனை திருமணங்கள் செய்ததில் ஒரே இரவில் முடிந்த திருமணமும் இருக்கிறது. தொழில் சம்பந்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு தங்கவேண்டியிருக்கும். அப்போது என்னை பாதுகாத்துக்கொள்ள அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வேன்.

உலகத்திலுள்ள பெரும்பாலான ஆண்கள் ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ விருப்பப்படுகின்றனர். ஆனால் ஸ்திரத்தன்மை என்பது இளம்பெண்ணிடம் கண்டறியப்படவில்லை; வயதான பெண்ணிடம் இருக்கிறது’’ என்கிறார் அப்துல்லா. இதன்பிறகு வேறொரு திருமணம் செய்துகொள்ளும் ஐடியா தனக்கு இல்லை என்கிறார் பலதரப்பட்ட திருமணங்களைப் பார்த்த அப்துல்லா.

வடக்கு கென்யாவில் தன்னை போன்ற அறிவாளியை சமாளிக்க ஒரு பெண்ணால் முடியாது என்பதற்காக 15 பெண்களை திருமணம் செய்துகொண்டு ஒரு வீட்டில் வசித்து வரும் டேவிட் என்ற நபர் குறித்த செய்திகள் வெளியான சில நாட்களில் அபு அப்துல்லாவின் திருமணங்கள் குறித்த செய்திகள் வெளியாகி இருக்கிறது. டேவிட்டிற்கு 107 பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com