சவுதி மன்னருக்காக தங்கத்தில் நகரும் படிக்கட்டுகள்

சவுதி மன்னருக்காக தங்கத்தில் நகரும் படிக்கட்டுகள்
Published on

சவுதி மன்னர் விமானத்தில் இறங்குவதற்கு தங்கத்திலான நகரும் படிகட்டுக்கள் பயன்படுத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி மன்னர் சல்மான், இந்தோனேஷியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சவுதியில் இருந்து சொகுசு கார் உட்பட மன்னருக்குத் தேவையான 460 டன் சாதனங்கள் இந்தோனேஷியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவருடன் சுமார் ஆயிரம் பேர் சென்றுள்ளனர். இந்தப் பயணத்தின் போது இருநாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன. இந்நிலையில் சவுதி மன்னர் விமானத்தில் இருந்து இறங்க, தங்கத்தால் ஆன நகரும் படிகட்டு, பயன்படுத்தப்பட்டதாகவும், அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் இந்தோனேஷிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com