உலகம்
ஏமன் தலைநகர் அருகே விமானத் தாக்குதல்: 35 பேர் பலி
ஏமன் தலைநகர் அருகே விமானத் தாக்குதல்: 35 பேர் பலி
ஏமன் நாட்டின் தலைநகர் சனா அருகே ஒரு ஹோட்டல் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாக சனா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்திருப்பதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சவுதி அரேபியக் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது நடந்திருக்கும் தாக்குதல் அவற்றில் மிகவும் கொடூரமானது என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.